_*Islamic Tamil Library*_
💙🤍💙🤍💙🤍💙🤍
✨ *Islamic Question and Answer.*
○ குகைவாசிகள் எவ்வளவு ஆண்டு குகையில் தங்கினார்கள்?
☞ *309.*
ஆதாரம்:-
🎙️ *அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்று ஒன்பது வருடங்கள் தங்கினார்கள்).*
_(குர்ஆன்18:25)_
○ மறுமையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் வருடங்களில் எத்தனை வருடத்தைப் போன்றது?
☞ *1000.*
ஆதாரம்:-
🎙️ *மறுமையில் ஒரு நாளின் அளவு ஆயிரம் வருடங்களைப் போன்றது.*
_(குர்ஆன் 22:47)_
○ ஃபிர்அவ்னிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற இறைவன் எந்த நபியை அனுப்பி வைத்தான்?
☞ *மூஸா நபி.*
ஆதாரம்:-
🎙️ *ஃபிர்அவ்னிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற இறைவன் மூஸா (அலை) அனுப்பினான்.அதை அவ்வாறே செய்தார்கள்.*
_(குர்ஆன் 26:63-68)_
○ தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்த தொழில் என்ன?
☞ *கவச ஆடை.*
ஆதாரம்:-
🎙️ *இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம்.எனவே ( இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா..?*
_(குர்ஆன் 21:80)_
~_*أبو عياش*_~✍🏻
No comments:
Post a Comment